உலகம் யாவையும்...

நிறுத்தத்தில் காத்திருப்பவர்கள் பேருந்து நேரத்தில் வர‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புகள் உண்ணும் முன்பு கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

மலச்சிக்கல் உள்ளோர் கழிவறையில் அமர்ந்திருக்கையில் கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கள்ளமாய்ப் புணர்வோர் கணவன் / மனைவி அறியாதிருக்க கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

புதிதாய்த் திருமணமான‌ பெண்கள் மாதவிலக்கு வ‌ராதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கன்னிப்பெண்களெனப்படுவோர் மாதவிலக்கு தவறாதிருக்க‌ கடவுளை பிரார்த்தித்துக்கொள்கிறார்கள்.

கடவுளை நினைத்தால் கொஞ்சம் பாவமாய்த்தான் இருக்கிறது.

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்