அவ‌ர்பொருட்டு எல்லார்க்கும்...

தங்கவேல் மாணிக்கதேவரை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். கோவையிலுள்ள ஒரு தனியார் சர்வதேச நுகர்பொருள் ஏற்றுமதி நிறுவனத்தின் வைஸ் ப்ரெஸிடெண்ட். வலைப்பூ வைத்து தமிழில் பதிவு எழுதுகிறார். அப்புறம், சாரு நிவேதிதாவின் சடையப்ப வள்ளல். முக்கியமாய் இவையாவும் நான் அறியும் முன்பே எனக்கு அறிமுகமானவர்.

இருவருமே கோயமுத்தூர்காரர்கள் என்கிற பொது அம்சத்தில் தொடங்கியதாக நினைவு (ஆரம்பத்தில் அவர் என் ஆங்கிலத்தை கேலி செய்கிறார் என்று எண்ணியே பேச ஆரம்பித்தேன்). எங்க‌ளுக்குள் அவ்வளவாய்ப் பழக்கமில்லை. அவர் என் எழுத்துக்களை வாசித்திருக்கிறார். நான் அவருடன் இணையத்தில் அரட்டையடித்திருக்கிறேன். அவ்வளவே.

நேற்று கதைத்துக்கொண்டிருக்கையில் பேச்சுவாக்கில் உடல் நலக்குறைவாயிருக்கும் என் தந்தை தற்போது கோவையில் ஒரு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார் என்று நான் சொன்ன மறு கணமே அவர் கேட்டது ‍ "நாளைக்கு அந்தப் பக்கமா குடும்பத்தோடு செல்கிறேன். அப்பாவை பார்க்கலாமா ?"

இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவருக்கு சிரமம் தர மனமில்லாததால் நாசூக்காய் மறுத்து விட்டேன். இன்றைய தேதியில் சக மனிதனை நேசிக்கும் குணம் என்பது இளமையில் வாய்ப்பது மிக‌ வினோதம். நேற்று "பெரியவர்கள் என்றுமே பெரியவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார். இது அவருக்கும் பொருந்தும்.

தமிழகத்தில் பருவ மழை பொய்க்காமல் பெய்கிறதென்றால் சும்மா இல்லை.

Comments

Touching post. I guess it is all in the values imbibed which the past generations accepted. They may also pass it on, wonder the next generations take it to sustain!!???,
Keep up the flow.
Karthik
Bangalore.
சரவணன் இதெல்லாம் டூமச்.
பர்ஸனலா உங்களிடம் பேசியதை பதிவிலா போடுவீர்கள். இருந்தாலும் ஹி..ஹி.. நல்லா இருக்கு....படிக்க.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்