இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.) Disclaimer: இந்த diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்
Comments
Neenga innum padam paakalaiya?