“ இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ ” - திருக்குறள் (913) “கன்னிப் பொணம் விழுந்திருச்சு!” ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும். “குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?” விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது. இறந்தது யார்? எப்படிச் சாவு நடந்தது? என்றெல்லாம் பிற்பாடு தான் பேச்சு தொடங்கியது. “சடங்கு எப்ப நடக்குதாம்?” “இதென்னய்யா புதுசாக் கேட்கறீங்க? எப்பவும் போல இன்னிக்கு ராத்திரி தான்.” கண்களில் மின்னும் ஆர்வத்தை மறைத்தபடி மெல்லிய குரலில் கிசுகிசுத்தார்கள். அந்தப் பெரிய வீட்டில் பிணம் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியைச் சுற்றி தரையில் ஏராளமான பெண்கள் ஒப்பாரி வைத்திருக்க, ராமசாமி மட்டும் பிணத்தின் முகத்தைப் பார்க்க வாகாக மரச்சேர் போட்டு அமர்ந்து கொண்டு தோளில் இருந்த துண்டின் முனையைச் சுருட்டி வாய்க்கும் மூக்கிற்கும் மத்தியில் வைத்திருந்தார். ஏற்கனவே அழுதிருப்பதும் இனியும் அழத் தயார் என்பதையும் அது சொல்லியது. அவர் வயதொத்தோர் வந்து பிணத்தை வ
Comments
Can you clear it out the thing above, you mentioned is for Fun or...?
Guess it.