Posts

கன்னித்தீவு - முன்னுரை

மீகாமன் குறிப்பு “For the nation to live, the tribe must die.” -    Samora Machel (First President of Mozambique) நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது. அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன். எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்ச...

இரு பாடல்கள்

2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன். (1) (Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.) பல்லவி: (அப்பா) பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய் ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள். (அம்மா) வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும் விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும் முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய் முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய். அனுபல்லவி: (இருவரும்) ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ். சரணம் 1: (அம்மா) அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள் சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள் பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள் சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள். (அப்பா) இடக்கான கேள்விகளில் ஆசிரிய...

எழுத்தாளக் குற்றவாளிகள்

இது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்: 1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள்? 2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை ‍புத்தகங்கள் கொண்டு வருகிறார்? ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா? என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன். (1) ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சி...

சூரிய கிரஹணம் - FAQs

1) சூரிய கிரஹணம் என்றால் என்ன? பூமி நிலா சூரியன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை நிலா மறைத்து விடுகிறது. அதனால் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூமியின் பக்கம் இருள் சூழ்கிறது. இது தான் சூரிய கிரஹணம். 2) சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யக்கூடாது? சூரியனைப் பார்க்கக் கூடாது. கறுப்புக் கண்ணாடி அணிந்து கூடப் பார்க்கக்கூடாது; கேமெரா, ஸ்மார்ட்ஃபோன், பைனாகுலர், டெலஸ்கோப் வழியும் பார்க்கக்கக்கூடாது; நிலைக்கண்ணாடியின் பிரதிபலிப்பையும் பார்க்கக்கூடாது. 3) ஏன் அப்படி? சூரியனின் கதிர்கள் கண்களில் விழுந்தால் ரெட்டினா (விழித்திரை) பாதிக்கப்படும். தற்காலிக அல்லது நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம். 4) இக்கதிர்கள் கிரஹணத்தின் போது மட்டும் தான் வருகின்றனவா? இல்லை. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஃபோட்டோஸ்பியரிலிருந்து (ஒளி மண்டலம்) இக்கதிர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 5) பிறகேன் கிரஹணத்தின் போது மட்டும் கண்ணுக்குப் பிரச்சனை? சாதாரண வேளைகளில் நம் கண்களால் சூரியனை நேரடியாய்ப் பார்க்க முடியாது. அதீத வெளிச்சம். அதனால் நம் ப்...

பிராமணர் Vs பறையர்

Image
வரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார். கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி "அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்?" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: "உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.") தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து க...

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்...

சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்

தமிழ் எழுத்தாள நண்பர்களுக்கு, வணக்கம். அமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம். அதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முய‌ற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏத...

புத்தம் புதுமைப் பெண்

Image
சுதந்திரமென்பது புணர்தலல்ல; புணர மறுத்தல். ‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல...

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்

Image
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்: 1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்? எத்தனை வேண்டுமானாலும். 2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா? தாரளமாய்க் கலந்து கொள்ளலாம். 3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா? இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். 4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா? சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். 5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி? தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031 தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031 மும்மொழிகளிலும் இரு ...

ஜன கண மன இந்தியா?

Image
தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி சொன்னதாக ஒரு வாக்கியம் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் சுற்றலில் இருக்கிறது. "என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எல்லோரும் தேசிய கீதம் பாடித்தான் ஆகனும்" என்று அவர் விளம்பியதாகச் செய்தி. அவர் அப்படிச் சொன்னது நிஜமா பொய்யா என இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்றாலும் அவர் இத்தகு விஷயத்தைச் சொல்லும் திராணி பெற்றவர் என்பதை முன்னிட்டு அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். தோழர் ஷாலின் மரிய லாரன்ஸ் இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் தேசிய கீதம் இந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்: "The National Anthem of India Jana-gana-mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950." ( https://www.india.gov.in/india-glance/national-symbols ) அதாவது சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய‌ ...