Posts

E=mc2 [சிறுகதை]

Image
“ஒளியின் வேகத்தை மிஞ்சிவிட்டோம்!” பூமி கிரகத்தின் ஜனாதிபதியும், இன்ன பிற கேபினெட் மந்திரிகளும் வீற்றிருந்த மகாத்மா காந்தி ஆடிட்டோரியத்தின் மையத் திடலில் நின்று கொண்டு, சர்வதேச விஞ்ஞானக் கழகத்தின் தலைவரும், மூன்று முறை நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ரே, மிகத் திட்டமாக, மிகத் தீர்க்கமாக அறிவித்த போது, அங்கு குழுமியிருந்த – பெளதீகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட – ஐந்நூற்று சொச்சம் விஞ்ஞானிகளால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒரு கணம் ஆழ்ந்த அமைதிக்குப் பின், அவ்வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளும், அதன் ரிப்பிள் எஃபெக்ட் சலசல‌ப்புகளும் அரங்கில் முழுமையாய் விலகாத நிலையில் கடைசி மிடறு நீரை அருந்தி விட்டு டாக்டர் ரே தொடர்ந்தார். “ஒளியின் வேகத்தை மிஞ்சுவது என்பது மனித குலத்தின் இருநூறு வருடக் கனவு. 1905ல் ஐன்ஸ்டைனின் "Does the inertia of a body depend upon its energy-content?" என்ற கட்டுரையில் தொடங்குகிறது அது. இப்போது கடைசியாய் அதை அடைந்தே விட்டோம். நாம் வாழும் காலத்தின் மகத்தான சாதனை இது.” செயற்கை நீரடைத்த‌ ப்ளாஸ்ட்டிக்‌ புட்டியைக் கொண்டு வந்து ஒயிலாய் அருகில் வைத்து நகர்ந்த...

பெண்மைப் பஞ்சு

Image
“ So what would happen if men could menstruate? Clearly, menstruation would become an enviable, worthy, masculine event: Sanitary supplies would be federally funded and free. Of course, some men would still pay for the prestige of commercial brands ” - Gloria Steinem, American Journalist சானிடரி நாப்கின் என்பது பெண்களின் மாதவிலக்கின் போதான ரத்தப் போக்கை உறிஞ்சி சுகாதாரத்தையும், சௌகர்யத்தையும் தரும் பஞ்சுப் பொருள். இது தவிர யோனியில் அறுவை சிகிச்சை, பிரசவத்துக்குப் பிந்தைய நாட்கள், கருக்கலைப்பு என பெண் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு நிகழ வாய்ப்புள்ள எல்லா சூழல்களிலும் அதைக் கையாளப் பயன்படுகிறது. சானிடரி டவல், சானிடரி பேட் என்று வேறு பெயர்கள் இதற்கு உண்டு - அல்லது பேட் என்று சுருக்கமாய். நம்மூரில் பிரபல ப்ராண்டின் பெயரால் பொதுவாய் இதை விஸ்பர் என்று அழைப்பவரும் உண்டு. சானிடரி நாப்கின் என்பது உடலுக்கு வெளியே, உள்ளாடையுடன் ஒட்டி வைத்துப் பயன்படுத்துவது. இன்னொரு வகையான டாம்பன் என்பது உடலுக்கு உள்ளே உறுப்புக்குள் வைத்துப் பயன்படுத்துவது. அடுத்து மென்ஸ்டுரல் கப் என்பது உடலின் உள்ளே வைத்து ர...

ஞாநி: அஞ்சலி

Image
எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞாநி இன்று அதிகாலை மரணமுற்றார். மதிப்பிற்குரியோருக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த முடியாத தொலைவில் தான் லௌகீக வாழ்வ‌ழுத்தங்கள் என்னை வைத்திருக்கின்றன. சரியாய் மூன்றாண்டுகள் முன் இதே நாளில் தான் - அது ஒரு தைப் பொங்கல் தினம் - பத்திரிக்கையாளர் ஞாநி முதல் இதழை வெளியிட்டு 'தமிழ்' மின்னிதழைத் துவக்கி வைத்தார். அப்போது அது குறித்து "என் மகனை விட ஒரு மாதம் மட்டுமே மூத்தவரான சரவணகார்த்திகேயன் தமிழ் எழுத்துலகில் துடிப்போடும் செறிவாகவும் இயங்கிவருவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அவரை ஆசிரியராகக் கொண்டிருக்கும் தமிழ் இதழ், மாற்பட்ட கருத்துக்களை ஆழமாகவும் நாகரிகமாகவும் விவாதிக்கும் களமாகவும், வெவ்வேறு ரசனைகளை மதிக்கும் படைப்புக்களுக்கான இடமாகவும் அதே சமயம் தன் வாசகர் யார் என்ற‌ புரிதலோடு அவர்களை நோக்கி இயங்குவதாகவும் செயல்பட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்." என்று சொல்லி இருந்தார். பேரன்புடன் எழுதப்பட்ட வரிகளாக அவை என்னை நெகிழ்த்தின. ஞாநி என் அரசியல் எழுத்துக்களுக்கு ஆசான். லட்சக்கணக்கானோருக்குப் போல் ஆனந்த விகடன் மற்றும் ...

ஆப்பிளுக்கு முன்(னுரை)

Image
அசத்திய சோதனை முதலிலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாக, அழுத்தமாகச் சொல்லி விடுகிறேன். இது வரலாற்று நூல் அல்ல; புனைவு. வரலாறு சார்ந்த புனைவு. இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை, எவ்வளவு இரண்டுக்கும் இடைப்பட்ட குழப்பங்கள் என்பது தொழில் ரகசியம். வரலாற்று ஆர்வமும் வாசிப்புத் திராணியும் கொண்டோர் சம்மந்தப்பட்ட தரவுகளைத் தேடித் தெரிந்து கொள்ளலாம். (அப்படியானவர்களுக்காக குறிப்புதவி நூற்பட்டியல் ஒன்றையும் புத்தகத்தின் கடைசியில் தந்திருக்கிறேன்.) என் தந்தை வழித் தாத்தா வே. இராசப்பன் ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி. 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது சிங்காநல்லூர் ரயில் கவிழ்ப்பு வழக்கில் பெல்லாரி சிறை சென்றவர். குளத்தேரியில் தண்டவாளத்தின் மரையைக் கழற்றி ப்ரிட்டிஷ் சரக்கு ரயிலைக் குளத்தில் கவிழ்த்தவர்களுள் அவரும் ஒருவர். காந்தி இப்போராட்டத்தை ஏற்பாரா தெரியாது, ஆனால் என் தாத்தா காந்தியின் மீது பெரும் பற்றுக்கொண்டவர். தாத்தா மாதந்தவறாமல் தியாகிகள் ஓய்வூதியம் பெற்றவர். வருடா வருடம் சுதந்திர தினத்திற்கு வீட்டுக் கூரையில் கொடியேற்றி ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து, பதிலாய் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பொன்னாடை பெற்...

உணர்வைச் சுரண்டும் கலை

Image
அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குநரின் திரைப்படம் அருவி. மிகச் சிக்கலான, அதே சமயம் மிக மலினமான வெற்றிச்சூத்திர மாயைகள் நிரம்பிய தமிழ் திரைப்பட உலகில் இப்படி ஒரு உள்ளடக்கம் வெல்லும் என்று நம்பிக்கையுடன் களம் புகுந்திருக்கும் அவரை முதலில் எந்த ifs and buts-ம் இன்றி அணைத்துக் கொள்ளலாம். Asmaa என்ற எகிப்தில் எடுக்கப்பட்ட, அரேபிய மொழித் திரைப்படத்தைத் தழுவியே அருவி எடுக்கப்பட்டது என்ற வாதப் பிரதிவாதங்களுக்குள் போக விரும்பவில்லை. அதைத் தாண்டி இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு பேச நினைக்கிறேன். ஒன்று திரைப்படம் பற்றியது; மற்றது நம் திரைப்படப் பார்வையாளர்கள் பற்றியது. முன்பொரு காலத்தில் - சுமார் இருபதாண்டுகள் முன் - இந்தியாவில் எய்ட்ஸ் பற்றி படைப்பில் பேசுவது என்பது முற்போக்காக, சமூக அவசியமாக இருந்தது. நிறைய எழுத்துக்களும், படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் அது பற்றி வந்தன. (ஒரு நகைச்சுவைத் துணுக்கு நன்றாய் நினைவில் உள்ளது: சவரக்கத்தி மூலம் எய்ட்ஸ் பரவும் என்பதால் அதற்கு ஆணுறை போட்டுச் சிரைப்பார் ஒரு நாவிதர்.) அருவியும் அப்போது வந்திருக்க வேண்டிய விழிப்புணர்வுப் படம். இன...

நான்காம் தோட்டா [சிறுகதை]

Image
“பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள் உயிர் வாழவே உரிமையற்றவர்கள்.” பொக்கை வாயவிழ்ந்து புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற் செய்யும் புன்னகை. துப்பாக்கியுடன் வரும் ஒருவனைத் தயங்கச்செய்யும் புன்னகை. தில்லி டிஐஜியும் காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள். நேற்று போலீஸ் சூப்பரின்டென்டண்ட் காந்திக்குப்பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாம் முயற்சி. ஏற்கனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள அந்த பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடங்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு. சென்ற வாரம் அங்கு பிரார்த்தனையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்புக்குப் பின்தான் இந்த முன்னெச்சரிக்கை. நல்லவேளையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. சுவர் மட்டும் சேதாரம் கண்டிருந்தது. பஞ்சாபி அகதி ஒருவன் காந்தியின் மீது சினமுற்று அதைச் செய்திருந்தான். போலீஸ...