மற்றுமொரு விருது

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை நேற்று சில விருதுகளை அறிவித்துள்ளது - ஜெயகாந்தனுக்கு பாரதி விருது, இளையராஜாவுக்கு M.S.சுப்புலட்சுமி விருது, பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரஸ்வதி விருது. இதில் இளையராஜா விஷயத்தில் மட்டும் வழக்கம் போல் மற்றுமொரு விருது தன்னை கௌரவித்துக்கொள்கிறது என்று தான் சொல்வேன் - அதே போல் அவ்விருதை இனி வாங்கவிருப்பவர்களையும் சேர்த்து.


2009‍ம் ஆண்டு சட்டப் பேரவையில் நடந்த சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது போல் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கலைஞர்களுக்கு தனி விருது வழங்கப்படும் என அரசு அறிவித்த‌து. அதன் தொடர்ச்சியாக இப்போது முதல் முறையாக இவ்விருதுகள் (ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழி) அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு விஷயம் மட்டும் இதில் உறுத்துகிறது. அது இளையராஜாவுக்குத் தரப்பட்டிருக்கும் விருதின் பெயர். கமல்ஹாசனுக்கு 'சூர்யா விருது' கொடுத்தது போல் இருக்கிறது இது.

Comments

இளையராஜாவை பொறுத்தவரை எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது தரப்படவது பிடித்தமாக தான் இருக்கும். அதனால் சூர்யா விருது பிரச்சனை இல்லை :)

ஆனால் மற்றொமொரு விருது என்று உங்கள் விருதுக்கு அடுத்தபடியாக இந்த பதிவை போட்டால் அவர் என்ன நினைப்பார் ? :)
@மணிகண்டன்
இந்தத் தலைப்பு பதிவின் இரண்டாவது வாக்கியத்தில் வரும் "மற்றுமொரு விருது" என்பதிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது (அதாவது இளையராஜாவுக்கு இது yet-another-award என்கிற அர்த்தத்தில்). மற்றபடி என்னுடைய விருது பதிவுக்குப் பின் இது வந்தது ஒரு விபத்தே (நீங்கள் சொன்ன பிறகு தான் இப்படி அர்த்தம் வருவதையே கவனிக்கிறேன்).

உங்களுக்கு என் மேலான அபிப்பிராயம் காரணமாக அப்படி தோன்றியிருக்கக் கூடும். என்ன செய்வது, கந்தனுக்கு புத்தி கவட்டைக்குள் தானே!
//கந்தனுக்கு புத்தி கவட்டைக்குள் தானே!//

:)-

உங்கள் மீது ஒன்று அப்படி மோசமான அபிப்பிராயம் எல்லாமில்லை என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் !

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

CSK Diet