பதிவர் vs எழுத்தாளர்

தமிழ் வலையுலகில் பதிவர் மற்றும் எழுத்தாளர் என்ற பதங்களின் பயன்பாடு குறித்து யுவகிருஷ்ணாவின் இந்த இடுகையின் ஒரு பகுதி பேசுகிறது. அதில் எனது பின்னூட்டக் கருத்துக்களின் முக்கியத்துவம் கருதியும், அவை மிக நீண்டு விட்டதால் தட்டச்சிய என் உடற் உழைப்பைக் கவனத்தில் கொண்டும் இங்கே தனி இடுகையாக‌:

*******

முன்குறிப்பு: எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதை நீங்கள் நையாண்டி செய்வதாக தவறாக நினைத்தோ, நான் writer என்ற prefixஐப் பயன்படுத்துபவன் என்பதாலோ ஆற்றப்படும் எதிர்வினையல்ல இது.

சென்னை என்று அழைப்பது பிராந்தியரீதியாக அடையாளப்படுத்தும் செயல் என்றால், நீங்கள் குறிப்பிடும் இண்டிபிளாக்கர் அமைப்பும் அதைத் தானே செய்கிறது - இது நகரம், அது நாடு என்பது மட்டும் தானே வித்தியாசம். என்னைப் பொறுத்தவரை சென்னை என்பது ஓர் அடையாளம் மட்டுமே - அந்தச் சொல் geographical vicinityயில் இருப்பவர்களை மனோரீதியாக இணைக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.

நான் பெங்களூரில் வசிப்பவன் என்பதால் என்னை உங்கள் குழுமத்தில் சேர்த்திக் கொள்ள மாட்டோம் என்றா சொல்லி விடுவீர்கள்?

எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்று நீங்கள் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அதனால் யாதொரு பயனும் இல்லை. நீங்களே பிற்பகுதியில் குறிப்பிடுவது போல், அதை வைத்துக் கொண்டு சில மேஜிக்குகளை வேண்டுமானால் வலைப்பதிவுகளில் செய்ய முடியுமேயொழிய இடுகைகளின் உள்ளடக்கத் தரத்தைக் கூட்ட அது உதவுமா என்பது சந்தேகமே.

//வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார்// இதை நிச்சயம் ஏற்கவே முடியாது. பத்ரி உட்பட ஓரிருவர் தவிர இதையெல்லாம் அப்படி productiveஆய் பயன்படுத்துபவர்கள் யாரென்று சொல்லுங்கள். Google Reader வழி 700க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து வருபவன் என்கிற முறையில் சொல்கிறேன்.

ம்ஹூம். யாருமே தென்படவில்லை.

தவிர, தமிழ் வலைப்பதிவுலகில் தீவிரமாக செயல்பட்டு வரும்‌ யாருமே வீடியோ போன்ற சங்கதிகளை மருந்துக்குக் கூட பயன்படுத்துகிற மாதிரி தெரியவில்லை (அப்படித் தரமாக எழுதும் ராஜநாயகம், மாதவராஜ், சுரேஷ் கண்ணன், செல்வேந்திரன், ஜ்யோவ்ராம், பைத்தியகாரன், அய்யனார், கென் என்று யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்).

ஆக, மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாய் செய்யப்படும் விஷயங்களை ஒட்டு மொத்த பதிவர்களுக்கு அடையாளமாக்குவது சரியல்ல. சுருக்கமாய், தமிழ் பதிவர்களில் 99%க்கும் மேற்பட்டோர் நீங்கள் சொல்லும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்ப்பதில்லை.

தவிர, ஆடியோ, வீடியோ, படங்கள் என இவ்வளவு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் நிரம்பிய போதிலும் blog (பதிவு) என்பது முதிர்ச்சியடையாத எழுத்துக்களைத் தாங்கிய ஒரு வலைத்தொகுப்பாகுப்பாகவே பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட ஓர் அந்தரங்கமான டைரி போல். அதை எழுதுபவர் blogger (பதிவர்) எனப்படுகிறார். ஆனால் எழுத்தாளன் என்பவன் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.

எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் மன அமைப்பு பொறுத்த‌து.

ஓர் உதாரணம் சொல்கிறேன். ISRO, DRDO, BARC, CSIR போன்ற ம‌த்திய அரசின் விஞ்ஞான ஆராய்ச்சி நிலையங்களில் எஞ்சியனியரிங் முடித்து புதிதாய் வேலைக்கு சேரும் 22 வயதுப் பையனுக்கு அவர்கள் தரும் பதவியின் பெயர் - SCIENTIST. அங்கேயே 35 வருடங்களுக்கு மேலாக‌ பழம் தின்று கொட்டை போட்டு ரிட்டயர்ட் ஆகும் நிலையில் இருக்கும் 58 வயது ஆசாமியின் பதவிக்கும் அதே பெயர் தான். அதன் இறுதியில் B,C,D,E,F,G,H என்று மட்டும் போட்டு அவர்களின் நிலைகளை வேறுபடுத்துவார்கள்.

இதில் புதிதாய்ச் சேரும் அந்த‌ 22 வயதுப் பையன் "இப்போது தான் சேருகிறோம்; இது வரை ஒன்றுமே சாதிக்கவில்லை. நம்மை எப்படி SCIENTIST என்று அழைத்துக் கொள்வது" என்று கேட்பது மாதிரி தான் இருக்கிறது உங்கள் பதிவர்களை எழுத்தாளர் என்று அழைப்பது பற்றிய நிலைப்பாடும். இங்கு தான் அந்த‌ப் பையனின் மன அமைப்பு வருகிறது. அவனுக்குள் இருக்கும் அல்லது இருக்க வேண்டிய நம்ம்பிக்கை (over confidence அல்ல‌) தான் அவனைத் தீர்மானிக்கிறது. மேலும் முன்னேற செலுத்துகிறது.

அதே தான் ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்கும் (உங்கள் பாஷையில் பதிவர்). கையெழுத்துப் பிரதியோ, உட்சுற்றுப் பத்திரிக்கையோ, வலைப்பதிவோ எழுதும் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னை எழுத்தாளனாக உணரும் அந்தத் திமிர் இருக்கும் என்றே நினைக்கிறேன். அது அணையாது உள்ளே எரிந்து கொண்டிருக்கும் வ‌ரை தான் அவன் தொடர்ந்து எழுத முடியும்.

என்ன சொன்னாலும், பதிவர் என்பவர் எழுத்தாளனாக மாறுவது அடுத்த கட்டம். இங்கு நான் குறிப்பிடும் மாற்றம் என்பது பத்திரிக்கையில் படைப்பு வருவது, புத்தகங்கள் வெளி வருவது போன்ற புறம் சார்ந்த விஷய‌ம் அல்ல; மனதில், அதன் காரணமாக எழுத்தில் ஏற்படும் அகநிகழ்வை. தீவிரமாக எழுதும் எந்தப் பதிவரும் ஒரு கட்டத்தில் அடைதே ஆக வேண்டிய மாற்றம் அது. நானோ நீங்களோ அதை அடைந்து விட்டோமா என்பதைத் தான் தொடர்ந்து எழுத்தின் வாயிலாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன்.

மற்றபடி, உங்களைப் போல் நானும் எங்கும் என்னை எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை - ஆனால் உள்ளே அப்படித் தான் உணர்கிறேன். வேண்டுமானால், வலைப்பதிவுகளில் எழுதுபவர்களை எழுத்தாளர் என்றும் ஜெமோ, சாரு, எஸ்ரா, பாரா போன்றவர்களை நல்ல எழுத்தாளர்கள் என்றும் வித்தியாசப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

பின்குறிப்பு: தீவிரமான தரமான எழுத்துக்கும் பதிவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும்! - இதுவரை பேசிய எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

*******

//ஆம், தெரிகிறது என்று சொன்னாலொழிய மேற்கொண்டு உங்களோடு இது சம்பந்தமாக மேலதிக விவாதத்தை வசதியாக இருக்காது என்று நினைக்கிறேன்// ஆம், தெரிகிறது. சொன்னதையே திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் இது தொடர்பாய், நான் கேட்டதற்கோ சொன்னதற்கோ இதில் ஏதும் பதிலில்லை என்பதால் மேலதிக விவாதம் செய்ய‌ வசதியாக இருக்காது. மன்னிக்கவும்!

பதிவர்கள் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்க்கவில்லை என்பதை தொழில்நுட்பத்தின் குறைபாடாக சொல்லவில்லை. அதே நேரம் அது பதிவர்களின் குற்றம் என்று நீங்கள் சொல்வதையும் ஏற்க மாட்டேன். பதிவர்களின் வேலை இது தான் என்று முடிவு செய்ய நீங்களோ நானோ யார்? அது அவரவர் இஷ்டம். தவிர, நீங்களே அதைச் செய்வதில்லையே (புதிய தலைமுறைக்கு எழுதுவதை பதிவுகளில் இடுவது கணக்கில் வராது அது உங்கள் தொழில் சார்ந்தது). அதனால் கற்பனையாக ஓர் உலகத்தை சிருஷ்டித்து எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அது போல் இல்லையே என்று குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

அதே போல் பதிவர் என்ற பதத்தை மட்டமாக நினைப்பதாகவும் நான் எங்குமே குறிப்பிட்டதாக நினைவில்லை; மாறாக எழுத்தாளர் என்பது அதன் அடுத்த கட்டம் என்று தான் சொல்லியிருக்கிறேன். அதில் மாற்றமே இல்லை. நீங்களாக ஓர் அகராதி தயார் செய்து கொண்டு அதை எல்லோரும் பின்ப‌ற்ற வேண்டும் என்று கட்டளையிடுவது சரியா?

உங்கள் என்ஜினியர், டாக்டர் உதாரணமே தவறு. நீங்கள் கம்பௌண்டர் என்று தான் அழைக்கப்பட‌ வேண்டும் என்று போராடுகிறீர்கள். நான் அடுத்த கட்டம் டாக்ட‌ர் என்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதும் பட்சத்தில், நீங்களே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் சமூகம் உங்களை எழுத்தாளர் என்றே அழைக்கும்; அடையாளப்படுத்தும். யாரும் அதைத் தடுக்க முடியாது.

மற்றொரு முக்கியமான விஷயம், உங்கள் கருத்தில், "நான் என்ன சாதித்து விட்டேன், எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள" என்கிற அடக்க‌த்தைக் காட்டிலும், "இவ்வளவு சாதித்திருக்கிறேன், நானே எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில்லை" என்கிற தொனியே வெளிப்படுவதாய்த் தோன்றியதால் தான் பின்னூட்டமே இடத் தோன்றியது, அப்படித் திணிப்பதும் தவறென்று தோன்றியதால். இதைக்கூட‌ தவறாக நினைக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் சினேக பாவ‌த்துடனேயே தான் சொல்கிறேன்.

மற்றப‌டி, எனது பின்னூட்டங்களின் சாராம்சமும் உங்களுக்குப் புரியாததன் மர்மத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் ஆசாமியை கலைஞர் என்றழைக்கும் ஒரு சமூகத்தில் பதிவர்களை இணைய எழுத்தாளர் என்றழைப்பதில் குற்றமில்லை என்பதே நான் சொல்ல நினைத்தது.

Comments

நல்ல விவாதம்....
நக்கல் செய்யாமல் சொல்லவந்ததை மட்டும் சொல்லியிருக்கீறீர்கள்.
முழுதாக உடன்படவில்லை என்றாலும் எனக்கு உங்கள் கருத்து பிடித்திருக்கிறது.
வலைஞன் said…
எழுத்தாளர்=மரபுக்கவிதை
பதிவர்=புதுக்கவிதை
ஆக இருவரும் கவிஞர்கள்தான் !
சிறிது காலத்தில் பழகி விடும்!!
வலைஞன் said…
//நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் ஆசாமியை கலைஞர் என்றழைக்கும்...//

''நவீனத்துவம்'' என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக தோன்றுகிறது!
Unknown said…
/-- மற்றபடி, உங்களைப் போல் நானும் எங்கும் என்னை எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை --/

அப்போ, புத்தகம் வெளிவருவதற்கு முன்பாகவே www.writercsk.com என்று Domain register செய்திருக்கிறீர்களே. சொல்லாமல் சொல்லியதாகத் தானே அர்த்தம்.

அதாவது தலித் எழுத்தாளர், கரிசல்காட்டு எழுத்தாளர், ஆச்சார எழுத்தாளர் என்ற பதங்கள் மலையேறி அடுத்தகட்டமாக இணைய எழுத்தாளர் என்ற சொற்பதமா!?!... ரைட்டு... நடத்துங்க...
selventhiran said…
என்னளவில் இயங்கும் தளம் எதுவாயினும் எழுதுகிறவன் எழுத்தாளனே... அது சரோஜாதேவியாக இருந்தாலும் கூட...(ஏனெனில் சரோஜாதேவியால் சமூகம் அடைந்த பாலியல் ஞானத்தை கல்வியால் கூட அளிக்க முடியவில்லை... சமூக பங்களிப்பில் சரோஜாதேவி விஞ்சி நிற்கிறார்)

ஒரு வசதிக்காக வேண்டுமானால் இவர் பத்திரிகைகளில் எழுதுகிறவர், இணையத்தில் எழுதுகிறவர் என அழைத்துக்கொள்ளலாம். ஒரு ஊடகத்திலிருந்து இன்னொரு ஊடகத்திற்கு தாவுதல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். நாளையே லக்கி சினிமாவிற்குத் திரைக்கதை எழுதலாம். சீரியலுக்கு வசனம் எழுதலாம். பாட்டெழுதலாம். விளம்பர வாசகங்கள் எழுதலாம். எழுத்து சாஸ்வதம். பதவி மாறுதல்களுக்குட்பட்டது.
selventhiran said…
அப்போ, புத்தகம் வெளிவருவதற்கு முன்பாகவே www.writercsk.com என்று Domain register செய்திருக்கிறீர்களே.

கடவுளே... எழுத்தாளனெனில் புத்தகம் கொண்டுவருவதுதான் அளவுகோலா... ?!
A Simple Man said…
//சரோஜாதேவியால் சமூகம் அடைந்த பாலியல் ஞானத்தை கல்வியால் கூட அளிக்க முடியவில்லை//
On your scale what is the count of people in your சமூகம்.

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்