Posts

கல்லளை [சிறுகதை]

Image
(Disclaimer: இக்கதை நெடிய மானுட வரலாற்றில் எங்கேனும், எப்போதேனும் நட‌ந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எழுத்தாளச் சுதந்திரத்துடன் முழுக்கக் கற்பனைப் புனைவாகவே நான் இதை முன்வைக்கிறேன். வாசகர்களையும் அவ்வாறே அணுகக் கோருகிறேன்.) “மிஸஸ். மிஷ்ரா, எல்லாம் நார்மல். இன்றிலிருந்து பன்னிரண்டாம் நாளில் பிரசவம்!” மல்லாக்கப் படுத்திருந்த அஹிம்ஸாவின் அகட்டிய கால்களுக்கு இடையிலிருந்து தன் வலது கரத்தை வெளியே எடுத்து கையுறையைக் கழற்றியபடி மருத்துவ‌ர் சொன்னாள். அஹிம்ஸா புன்னகை செய்தாள். அவள் கொஞ்சம் கவலைகளுடன்தான் வந்திருந்தாள். சில நாட்களாக முதுகு வலி இருக்கிறது. வீங்கித் தொங்கும் வயிற்றின் அடியில் அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அந்தப் புகார்களை எல்லாம் சொன்ன போது மருத்துவர் ஒன்றும் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள். அது அவளது பாஷை - ஒன்றும் பிரச்சனை இல்லை, அவை இயல்பான அறிகுறிகள் என்று அதற்கு அர்த்தம். அவள் சற்று நெற்றி சுருக்கினால் வழமையிலிருந்து விலகி இருக்கிறது, ஆனாலும் சரி சீர் படுத்திடலாம் என்று அர்த்தம். அசலாகவே பிரச்சனை எனில் வாய் திறப்பாள். சிக்கலும் தீர்வும் சுருங்கச் சொல்வாள். மருத்துவரிடம் வந்து செல்லு

தமிழ் நிலத்தின் ஆதி கொலை வழக்கு

பொ.ஊ. 969ம் ஆண்டு என்பது ஓர் உத்தேசக் கணக்கு. ஆதித்த கரிகாலன் என்ற சோழ இளவரசன் கொலை ஆகிறான். கொன்றது அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள். அனேகமாகத் தமிழ் வரலாற்றில் பதிவாகி இருக்கும் முதல் கொலை வழக்கு அதுவே. எப்படி தஞ்சை பெரிய கோயில் என்பது ராஜராஜ சோழன் என்ற மாபெரும் த‌மிழரசன் கட்டினான் என்பதே பல்லாண்டுகளாக மக்களுக்குத் தெரியாமல் போய் இறுதியில் ஒரு ப்ரிட்டிஷ்காரர் வந்து மறுகண்டுபிடிப்பு செய்து மீள்அறிமுகப்படுத்த‌ வேண்டிய‌ நிலை இருந்ததோ அப்படி ஆதித்த கரிகாலன் கொலையும் பல காலம் மக்களால் மறக்கப்பட்டு பிறகு 1950-ல் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வாயிலாக நினைவூட்டப்பட்டது. ஆனால் பொன்னியின் செல்வன் ஒரு புதினம். கற்பனைக் கதை. இந்தக் கொலை பற்றி இருக்கும் அசல் வரலாற்று ஆவணங்கள் என்னென்ன‌? சரித்திர ஆய்வாளர்கள் இது பற்றி அதிகாரப்பூர்வமாகச் சொல்வது என்ன? இது பற்றி முழு உண்மை வெளிவந்து விட்டதா? * ஆதித்த கரிகாலன் கொலை பற்றிப் பார்க்கும் முன் சோழ நாட்டில் அப்போது நிலவிய அரசியல் சூழல் சுருக்கமாக: சோழ மன்னர் கண்டராதித்தர் மறைய, அவரது மகனான மதுராந்தகன் சிறுவனாக இருக்க, கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சயர் அர

மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை

Image
காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான‌ ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர‌ வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த‌ ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட‌ முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு. இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல‌, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே. ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வ

ஓர் அழகியைக் கொண்டாடுவது எப்படி?

Image
பெண் என்கிற‌வள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக‌ விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான். மலை உள்ளிட்ட இயற்கைக் கொடைகளோடும் இசை போன்ற‌ கலைச் சரக்குகளோடும் இணை வைத்துக் கொண்டாடத்தக்கது பெண்ணழகு. பலர் அதை ரகசியமாகவும் சிலர் பகிரங்கமாகவும் செய்கிறார்கள். ரசிக்கப்படுவதால் வெட்கப்படலாம்; ரசிப்பதற்கே கூட‌ வெட்கப்படுவதா! எப்படியோ பெண் ரசிப்புத் தொழில் சிற‌ப்பாகவே நடந்து வருகிறது. அழகென்றால் அன்னை தெரசா, பிடித்தவரே பேரழகு என்கிற உணர்ச்சிவசங்களைக் கடந்து பார்த்தால் அழகு என்பது ஒருவர‌து புறத் தோற்றம் மற்றும் உடல் மொழியினால் ஈர்க்கப்படுவதே. புறத்தோற்றம் என்பதில் ஒருவரது முகம், உடல் வடிவு எல்லாம் சேர்ந்து கொள்ளும். உடல் மொழியில் அசைவுகள, நகர்வுகள், குரலினிம

பீத்தோவனின் சிம்ஃபொனி [சிறுகதை]

Image
புத்தாண்டின் பின்னிரவில் குறுமின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மஹாஷ‌ரண மடிவாளா மசிதேவா மேம்பாலத்தின் புராதனக் குண்டுக் குழிகளில் ஆக்டிவா நூற்று இருபத்தைந்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போதுதான் அவர்களால் தூக்கப்பட்டேன். அவர்கள் என்றால் ஒரு வித வினோதர்கள். மூன்று பேர். என்னை விட உயரம் குறைவாக இருந்ததும், முகத்தில் ஒரே அகலக் கண் இருந்ததும், மூன்று சன்ன‌ வாய்கள் இருந்ததும், கைகள் மனிதர்கள் போல் ஒரு ஜோடி இருந்தாலும் அவற்றில் தலா ஒரே விரல் இருந்ததும் மட்டுமே அந்த இருளில் புலனானது. நிச்சயம் மானிடர் அல்லர். அயலார்கள். ஏதிலிகள்! புதிதாய்ப் பிரசவித்த பெண்களிடம் வேர்வையின் வீச்சமும் பாலின் மணமும் கலந்து வீசும் வாசனை அவர்களிடம் இருந்தது. பெண்களாக இருக்குமோ என எண்ணம் வந்து மார்புகளைக் கவனித்து ஏமாந்தேன். ஒரு ரோமமும் விளைந்திடாத‌ வழுக்கைத் தேகம். நடுவில் நின்ற‌வள் என் நெற்றி மத்தியில் தனது இடது கை ஒற்றை விரலால் தொட்டாள். அதிலிருந்து ஒரு நீல‌ ஒளி கிளம்பி என் மண்டைக்குள் புகுவதைப் பாராமலேயே உணர முடிந்தது. தமிழின் முக்கிய இளம் எழுத்தாளனான நான் எதிர்காலத்தில் இந்தச் சம்பவம் பற்றி எழுதுகையில் மடிவாளா மசி